டில்லியில் செய்தது போன்று இங்கும் செய்ய நினைக்கின்றனர்: முதல்வர் ஸ்டாலின்
27 மாசி 2026 வெள்ளி 08:24 | பார்வைகள் : 192
டில்லியில் செய்தது போன்று, தமிழகத்திலும் செய்ய நினைக்கின்றனர். அதற்கு பயப்பட மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் நடந்த திமுக முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மேற்கு மண்டலத்தில் 39 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் அனைத்திலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற செய்தி தான் பிளாஷ் நியூஸ் ஆக வர வேண்டும். கடந்த சட்டசபை தேர்தலில் மேற்கு மண்டலத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. லோக்சபா தேர்தலில் எப்படி பெரிய வெற்றி பெற்றோமோ அதை போன்று சட்டசபை தேர்தலிலும் பதிவு செய்ய வேண்டும்.
மேற்குமண்டலத்தில் அத்தனை திட்டங்கள் செய்து கொடுத்துள்ளோம். அத்திக்கடவு அவினாசிதிட்டம், ஐடி பூங்கா, செம்மொழிப் பூங்கா, ஜிடி நாயுடு மேம்பாலம், அவினாசி சாலை மேம்பாலம், சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.உலக தரத்தில் கிரிக்கெட் மைதானம் வர உள்ளது. சூலூர் பகுதியில் செமி கண்டக்டர் பூங்கா வரப்போகிறது. 75 மின்சார பஸ்கள் வர உள்ளன. மேற்கு புறவழிச்சாலை தி்டடம் உளளிட்ட பல வர உள்ளன. தொழில்முனைவோர் அதிகம் இருக்கும் மேற்கு மண்டலம் வளர்ச்சியை தான் விரும்பும் என நிரூபிக்க வேண்டும். அடுத்த 2 , 3 மாதம் உங்களுக்கும் எனக்கும்ஓய்வு கிடையாது. திமுகவின் செயல்பாடு அதிகமாக இருக்க வேண்டும். மக்கள் தான் எஜமானார்கள். நாம் அவர்களின் சேவகர்கள்.
வளர்ச்சி என்பதே பிடிக்காத கட்சியாக பாஜ உள்ளது. அதனால் தான் அக்கட்சியை மக்கள் புறக்கணிக்கிறார்கள். அதிமுகவை கிளைக்கழகமாக மாற்றி முன்னேறி வர முயற்சி செய்கின்றனர். பிரதமர் மோடி திடீரென ஜெயலலிதாவை புகழ்கிறார். குஜராத் மோடியா, இந்த லேடியா என விமர்சித்த ஜெயலலிதா மீது பிரதமர் மோடிக்கு திடீர் பாசம் வந்துள்ளது. ஊழல் அதிகம் நடக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது என அமித்ஷா பேசியது மறந்துவிட்டதா?
மத்திய பாஜ ஆட்சியில் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. சொல்லிக் கொள்ள எந்த சாதனையும் இல்லாத காரணத்தினால் ஜெயலலிதா புகழ்பாடி ஓட்டு வருமா என பார்க்கிறார். தமிழகத்திற்கு என எந்த சிறப்பு திட்டத்தையும் பட்ஜெட்டில் அறிவிக்க மனம் இல்லாத உங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.
தென் இந்தியவின் மான்செஸ்டராக இருக்கும் கோவைக்கு மெட்ரோவுக்காக ஏன் அனுமதி தரவில்லை?
கோயில் நகரமான மதுரை மெட்ரோவுக்கு அனுமதி கொடுத்து விட்டீர்களா?
திருச்சி மெட்ரோவுக்கு அனுமதி வழங்க எது தடுக்கிறது?.தமிழக மெட்ரோ திட்டத்துக்கு ஏன் அனுமதி கொடுக்க மறுக்கிறீர்கள்?
ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி எங்கே?
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முழுமையான நிதியை எப்போது தருவீர்கள்?
பள்ளி குழந்தைகளுக்கு தர வேண்டிய 3,500 கோடி ரூபாய் எஸ்எஸ்ஏ நிதியை தராமல் இழுத்தடிக்க என்ன காரணம்?
ஜல்ஜீவன் இயக்கத்திற்கான மானியம் 3,548 கோடி ரூபாயை எப்போது தருவீர்கள்?\u003cbr\u003e\u003cbr\u003eஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2,246 கோடி ரூபாயை எப்போது தருவீர்கள்?
மத்திய அரசு திட்டங்களுக்கு தர வேண்டிய நிதியை கூட தராமல் ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள்?.
ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு இந்தாண்டு9,600 கோடி இழப்பு ஏற்படப்போகிறது.
ரிசர்வ் வங்கியில் தமிழக வங்கிக்கணக்கில் இருந்து தொகையை பிடித்தம் செய்தது சரியா?
தமிழகம் மின்பகிர்மான கழகத்துக்கு 16298 கோடி இழப்பீட்டு நிதி வழங்குவதில் நிபந்தனை விதித்து கூடுதல் சுமை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பாஜ உடன் கூட்டணி அமைத்து மாபெரும் துரோகியாக இபிஎஸ் உருவெடுத்துள்ளார். தமிழின விரோதிகள், தமிழ் துரோகிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி அவர்களுக்கு தோல்வியை பரிசாக தர வேண்டும். இதுதான் நம் முன் இருக்கும் முதல் கடமை.
தேர்தல் கூட்டணியின் ஆயுள் சில காலம். திமுக கூட்டணி அதை உடைத்துள்ளது. பாஜவை வீழ்த்தவேண்டும் என்று 2019 தேர்தலில் துவங்கப்பட்ட கூட்டணிஇப்போது வரை தொடர்கிறது.தமிழக தேர்தல் வரலாற்றில் நீண்ட காலம் ஒற்றுமையுடன் கூட்டணி தொடர்வது இதுவே முதல் முறை. வளர்ச்சி மட்டும் அல்ல கூட்டணியிலும் சாதனை படைத்துள்ளோம்.
தேர்தலுக்காக தான் கூட்டணி அமைத்துள்ளோம் என இபிஎஸ் கூறினார். என்டிஏ எனும் சர்க்கசின் மாஸ்டர் தான் பாஜ. வித்தை காட்டுபவர் தான் இபிஎஸ். கொள்கை இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணியாக அது உள்ளது. அதற்கு இபிஎஸ் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தன்னை காப்பாற்றிக் கொள்ள சுயநலத்தோடு கூட்டணி அமைத்துள்ளார். பிரச்னை வரும்போது எல்லாம், டில்லிக்கு மாறி மாறி சென்று சரணாகதி அடைவது வழக்கமானது. நாம் கொள்கையில் உறுதியாக நின்று போராடுகிறோம்.
டில்லியில் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் மேல், பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்கள். நேர்மையாக நேர் வழியில் தேர்தலை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாமல் கோழைத்தனமாக நடந்து கொண்டார்கள். இன்று அந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என நீதிமன்றம் கூறிவிட்டது.
கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியாவும் சிறையில் கழித்தநாட்களை பாஜவால் திருப்பி த ர முடியுமா? மீண்டும் டில்லியில் தேர்தலை நடத்த முடியுமா? இதே பார்முலாவை தான் தமிழகத்தில் செய்ய நினைக்கின்றனர். தனது ஏவல் அமைப்புகளை வைத்து நம்மை மிரட்ட பார்க்கின்றனர். உங்கள் அலட்டல் மிரட்டல்களுக்கு பயப்பட நாங்கள் அடிமையும் இல்லை. கோழையும் இல்லை. தைரியமாக உங்களை எதிர்கொள்வோம். அதனால் தான் மக்கள் மட்டும் அல்லாமல் கட்சிகளும் நம்முடன் இணைவார்கள்.
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் குறைவதை பார்த்து இருக்கிறோம். அதற்கு மாறாக நமது பலம் அதிகரிக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan