Paristamil Navigation Paristamil advert login

உடல்- உள ரீதியான தாக்குதல்களின் எண்ணிக்கை உயர்வு!!

உடல்- உள ரீதியான தாக்குதல்களின் எண்ணிக்கை உயர்வு!!

27 மாசி 2026 வெள்ளி 18:57 | பார்வைகள் : 307


பிரான்சில் கடந்த 2025 ஆம் ஆண்டில், உடல் ரீதியான மற்றும் உள ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

473,000 தாக்குதல்கள் சென்ற ஆண்டில் பதிவாகியுள்ளன. அவற்றில் 24% சதவீதமானவை சிறுவர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 114,500 சிறுவர்கள் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது அதற்கு முந்தைய 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8% சதவீதம் வரை அதிகமாகும். 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11% சதவீத உயர்வாகும்.  இந்த எண்ணிக்கையை உள்துறை அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

அதேவேளை, பாலியல் ரீதியான தாக்குதல்கள் கணிசமாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.