Paristamil Navigation Paristamil advert login

யாருடன் கூட்டணி? 28-ம் தேதிக்குள் முடிவு ! பாமக நிறுவனர் ராமதாஸ் பதில்

யாருடன் கூட்டணி? 28-ம் தேதிக்குள் முடிவு ! பாமக நிறுவனர் ராமதாஸ் பதில்

27 மாசி 2026 வெள்ளி 11:43 | பார்வைகள் : 163


திராவிட கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா என்ற கேள்விக்கும் பதில் அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், வரும் சனிக்கிழமைக்குள் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திராவிட கட்சிகளோடுதான் கூட்டணி இருக்கும்; 28ம் தேதிக்குள் எந்த வாகனத்தில் (கூட்டணியில்) பயணிக்கிறோம் என்பது தெரிந்துவிடும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியினர் இரண்டு தரப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதில், அன்புமணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியோடு கை கோர்த்த நிலையில், ராமதாஸின் கூட்டணி நிலைப்பாடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், மாவட்ட செயலாளர்கள் மாநில பொறுப்பாளர்களை கூட்டி கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. தேர்தலில் எப்படி பணியாற்றுவது, எந்த மாதிரி யுக்திகளை கையாள்வது குறித்து கேட்டு எல்லோரும் அதன்படி செயல்பட கேட்டுக்கொள்ள கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது" என்றார்.