அத்துமீறிய கார்கள்! - துப்பாக்கிச்சூடு!
26 மாசி 2026 வியாழன் 14:23 | பார்வைகள் : 419
காவல்துறை வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பெப்ரவரி 25, புதன்கிழமை நண்பகல் Sèvres (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Peugeot 308 மற்றும் Toyota Rav4 என இரண்டு கார்கள் ஒன்றை ஒன்றுடன் போட்டியிட்டுக்கொண்டு வீதிகளில் பயணிக்க, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், இரு கார்களையும் தடுத்து நிறுத்தினர்.
முதலில் இரு கார்களும் நின்றதாகவும், இருவரையும் சோதனையிடும் போது, 308 கார் மட்டும் இயக்கப்பட்டு வேகமாக தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது காவல்துறை வீரர் இழுத்துச் செல்லப்பட்டு காயமடைந்ததாதாகவும், மற்றைய காவல்துறை வீரர் ஒருவர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த Peugeot 308 கார், திருடப்பட்டது எனவும், அதன் உண்மையான உரிமையாளர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan