Paristamil Navigation Paristamil advert login

மின்னணு காப்பு அணிய வேண்டியிருந்தால் பிரச்சாரம் செய்ய மாட்டேன்: மரின் லூ பென் உறுதி!!

மின்னணு காப்பு அணிய வேண்டியிருந்தால் பிரச்சாரம் செய்ய மாட்டேன்: மரின் லூ பென் உறுதி!!

26 மாசி 2026 வியாழன் 08:09 | பார்வைகள் : 2991


2027ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், மின்னணு காப்பு(bracelet électronique) அணிய வேண்டிய தண்டனை விதிக்கப்பட்டால் தாம் தேர்தல் பிரசாரம் செய்யமாட்டேன் என்று மரின் லூ பென் தெரிவித்துள்ளார். இத்தகைய கட்டுப்பாடுகளுடன் வாக்காளர்களை நேரில் சந்தித்து கூட்டங்களில் பங்கேற்பது சாத்தியமில்லை; இது தன்னை வேட்பாளராக நிற்பதை மறைமுகமாகத் தடுக்கும் வழியாகும் என்றும் அவர் கூறினார். 

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்கள் தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு ஜூலை 7ஆம் திகதி வெளியாக உள்ளது. தாம் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், கட்சித் தலைவர் ஜோர்டான் பார்டெல்லா வேட்பாளராக இருப்பார்; அவர்மீது எந்த கட்டுப்பாட்டு அல்லது மேற்பார்வை பங்கையும் தாம் ஏற்கமாட்டேன் என்று லூ பென் விளக்கினார். அவருக்கு தேவையான அளவில் தான் தனது ஆலோசனையை வழங்குவேன் என்றும், 2027ஆம் ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தாம் அரசில் இணையமாட்டேன் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.

எழுத்துரு விளம்பரங்கள்