தி.மு.க.,வுக்கு பூஜ்யம்; அ.தி.மு.க.,வுக்கு ராஜ்யம்: பழனிசாமி
26 மாசி 2026 வியாழன் 08:49 | பார்வைகள் : 132
தி.மு.க., கூட்டணியில் விரிசல் விழுந்து விட்டது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை மதுரவாயல், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டப வளாகத்தில், நேற்று மாலை நடந்த, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஜெயலலிதா பிறந்த நாளில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தேன். உடனே, பூஜ்யமும் பூஜ்யமும் சேர்ந்தால் பூஜ்யம் தான் கிடைக்கும் என்கிறார் முதல்வர் ஸ்டாலின். தி.மு.க.,வுக்கு தான் தேர்தலில் பூஜ்யம் கிடைக்கும். அ.தி.மு.க.,வுக்கு ராஜ்யம் கிடைக்கும்.
தேர்தல் பயம் வந்து விட்டதால், மகளிர் உரிமைத் தொகை, கோடைக்கால உதவித் தொகை 5,000 ரூபாயை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உள்ளார். மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே கொடுக்கா விட்டாலும், மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கத்தான் போகிறது.
மக்களை ஏமாற்றும் இந்த தந்திரத்தை, 'சூப்பர் ஹிட்' என்கிறார் ஸ்டாலின். ஆனால், அ.தி.மு.க.,வின் அறிவிப்பு தான் 'சூப்பர் ஹிட்!'
புதிது புதிதாக திட்டங்களுக்கு பெயர் வைப்பதற்காக, ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்
தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆட்சியில் பங்கு கேட்கிறது. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அமைச்சர் நேரு மீது வழக்கு பதியவில்லை.
தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் 10 ஆண்டுகளாக அடிமையாக உள்ளன. தி.மு.க.,வுக்கு அடிமையாக இருப்பதால் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வளரவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள், அந்தந்த கட்சி கொள்கை அடிப்படையில் செயல்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan