Steak துண்டுகள் சால்மொனெல்லா அச்சம் காரணமாக மீளப்பெறப்படுகிறது!!
25 மாசி 2026 புதன் 21:45 | பார்வைகள் : 2627
Montfort நிறுவனத்தின் மாட்டிறைச்சி துண்டுகள் (Steaks hachés), Le Faouët-Morbihan பகுதியில், Bretagne யில் தயாரிக்கப்பட்டவை,m. சால்மொனெல்லா கிருமி தொற்று சந்தேகத்தின் காரணமாக France முழுவதும் அவசரமாக திரும்பப் பெறப்படுகின்றன. 15% கொழுப்பு கொண்ட பல அளவுகளில் உள்ள ஐந்து தொகுதிகள் இதில் அடங்கும்.
- 15% கொழுப்பு கொண்ட 8 x 125 கிராம் steaks hachés (மார்ச் 1 வரை பயன்படுத்தலாம்)
- 15% கொழுப்பு கொண்ட 6 x 100 கிராம் steaks hachés (பிப்ரவரி 27 வரை பயன்படுத்தக்ககூடியது)
- 15% கொழுப்பு கொண்ட வட்ட வடிவ steaks hachés (மார்ச் 3 வரை பயன்படுத்தலாம்)
- 15% கொழுப்பு கொண்ட 25 கிராம் மற்றும் 8 x 100 கிராம் steaks hachés (பிப்ரவரி 27, 2026 வரை பயன்படுத்தக்கூடியவை)
இந்த எச்சரிக்கையை அரசின் rappel.conso இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்த தயாரிப்புகளை உண்பதால் திடீர் வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற உணவு விஷத்தன்மை அறிகுறிகள் தோன்றலாம். குறிப்பாக சிறிய குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.

வாங்கியவர்கள் அவற்றை உணவாக பயன்படுத்தாமல் திருப்பி வழங்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும்; அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். முழுமையாக குறைந்தது 65°C வரை சமைத்தால் பக்டீரியாக்களை அழிக்க முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan