இலங்கையில் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
21 மாசி 2026 சனி 17:28 | பார்வைகள் : 952
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைவாக, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது:
கண்டி மாவட்டம்: யட்டிநுவரை, தொழுவ, உடுதும்பரை, கங்க இஹல கோரளை
கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, கேகாலை, தெஹியோவிட்ட, அரநாயக்க, மாவனல்லை
மாத்தளை மாவட்டம்: இரத்தோட்டை, அம்பகமுவ கோரளை, லக்கல பல்லேகம, வில்கமுவ, உக்குவளை
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி
இதேவேளை, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட (Level 2) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது:
பதுளை மாவட்டம்: ஹல்துமுல்லை
நுவரெலியா மாவட்டம்: நில்தண்டஹின்ன, வலப்பனை
இரத்தினபுரி மாவட்டம்: அயகம, கிரியெல்ல
மேலும், பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (Level 1) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது:
பதுளை மாவட்டம்: மீகஹகிவுல, கந்தகெட்டிய, ஹப்புத்தளை, பசறை
காலி மாவட்டம்: நியகம
அம்பாந்தோட்டை மாவட்டம்: வலஸ்முல்ல
கண்டி மாவட்டம்: உடுதும்பரை, பாததும்பரை, உடபலாத்த, உடுநுவரை, பஸ்பாகே கோரளை, பாதஹேவாஹெட்ட
கேகாலை மாவட்டம்: தெரணியகல
மொனராகலை மாவட்டம்: படல்கும்புர
நுவரெலியா மாவட்டம்: மேற்கு கொத்மலை, ஹங்குரன்கெத்த, அம்பகமுவ, கிழக்கு கொத்மலை மற்றும் மத்துரட்ட
இரத்தினபுரி மாவட்டம்: குருவிற்ற, கலவான, எஹெலியகொட மற்றும் கொலொன்ன
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று இரவு 08.30 மணி முதல் நாளை இரவு 08.30 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan