Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

21 மாசி 2026 சனி 12:57 | பார்வைகள் : 1898


இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன.

இதன்படி, இன்று முற்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் "22 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை 366,300 ரூபாவாக அதிகரித்துள்ளது.

நேற்று (20) அதன் விலை 362,600 ரூபாவாகக் காணப்பட்டது.

இதேவேளை, வெள்ளிக்கிழமை 392,000 ரூபாவாகக் காணப்பட்ட "24 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 396,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.