‘தாய் கிழவி’ படம் எப்படியிருக்கு?
20 மாசி 2026 வெள்ளி 14:45 | பார்வைகள் : 1468
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல், படங்களையும் தயாரித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’, சூரியின் ‘கொட்டுக்காளி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர், அடுத்ததாக தயாரிக்கும் திரைப்படம் ‘தாய் கிழவி’. இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படம் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் ‘தாய் கிழவி’ திரைப்படத்தை பிப்ரவரி 27ஆம் தேதி வெளியிடுவதாக மாற்றி அறிவித்துள்ளனர்.
தற்போது படத்திற்கான புரோமோஷன் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் விமர்சனம் வெளியாகியிருக்கிறது. தாய் கிழவி படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. சிவகார்த்திகேயன், சரத்குமார், ராதிகா, சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி உள்ளிட்டோருடன் நடிகர் கமல்ஹாசன் படத்தை பார்த்தார்.
படத்தைப் பார்த்த பின் பேசிய கமல், "இந்தப் படத்தைப் பற்றி நானும் பத்திரிகைகளும் சொல்வதைவிட மக்கள் சொல்வார்கள். சிவகார்த்திகேயன் நல்ல தயாரிப்பாளர். அதேபோல், சிவக்குமார் முருகேசன் சிறப்பான இயக்குநர்" என்று பாராட்டினார்.
முன்னதாக, படம் முடிந்த பிறகு இயக்குநர் சிவக்குமார் முருகேசன் நெகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தபடி நிற்க அவருக்கு கமல், சரத்குமார், ராதிகா ஆகியோர் கட்டியணைத்து பாராட்டி மேலும் நெகிழவைத்தனர். இந்த வீடியோவும் கமலின் பாராட்டும் ‘தாய் கிழவி’ படத்திற்கு கூடுதல் ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
.
இதே சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் தான் சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'சேயோன்' என்கிற படத்தில் நடிக்கிறார். மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் கிராமத்து படமாக இதன் முதல் பார்வை அண்மையில் வெளியானது. இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan