துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன் காதலா?
20 மாசி 2026 வெள்ளி 12:38 | பார்வைகள் : 1815
நடிகர் துருவ் விக்ரம் - அனுபமா பரமேஸ்வரன் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக வதந்தி பரவி வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பைசன்’. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பில் தயாரித்துள்ள இந்தப் படம் ரூ.75 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்தது.
இந்நிலையில் ‘ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா’ சார்பில் மும்பையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ‘பைசன்’ படக்குழுவைச் சேர்ந்த மாரி செல்வராஜ், அனுபமா பரமேஸ்வரன், துருவ் விக்ரம், பசுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதில் துருவ் விக்ரம் - அனுபமா பரமேஸ்வரன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை துருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதை ஹார்டின் சிம்பிளுடன் நடிகை அனுபமா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துகொண்டார்.
முன்னதாக அனுபமாவும், துருவ் விக்ரமும் காதலித்து வருவதாக பரவிய தகவலுக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக இந்த புகைப்படம் அமைந்துள்ளது. முன்னதாக சென்னையில் நடைபெற்ற JFW விருது வழங்கும் விழாவில் பார்வையாளர்கள் மத்தியில் அனுபமா பரமேஸ்வரனுக்கு துருவ் விக்ரம் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
அப்போது அனுபமாவிடம், ‘நள்ளிரவு 2 மணிக்கு திரைத்துறையிலிருந்து யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால் யாருக்கு கால் செய்வீர்கள்?’ என கேட்டதற்கு, ‘துருவ் விக்ரமுக்கு கால் செய்வேன்’ என்று கூறியிருந்தார். இது போன்ற சம்பவங்களால் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan