‘சேயோன்’ படத்திற்கு எதிராக புகார்!
20 மாசி 2026 வெள்ளி 12:22 | பார்வைகள் : 1701
ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க சிவகார்த்திகேயன் நடிப்பில் சேயோன் என்ற திரைப்படம் உருவாகிறது என அறிவித்திருக்கும் நிலையில் அந்தப் படத்திற்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘மதராஸி’, ‘பராசக்தி’ படங்களில் நடித்தார் சிவகார்த்திகேயன். அடுத்து அவர் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இந்தப் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ‘தாய்கிழவி’ படத்தை இயக்கிய சிவ முருகேசன் இயக்குகிறார். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.
படத்திற்கு ‘சேயோன்’ என தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. ‘சேயோன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பொறுத்தவரை, கையில் அருவாளுடன் நெற்றியில் பட்டை போட்டுக்கொண்டு பனியனுடன் அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். மீண்டும் கிராமத்து கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
இதற்கிடையே, ‘சேயோன்’ தலைப்பு தங்களுடையது என புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளியான மாயோன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக சேயோன் என்ற படத்தை எடுக்க தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராஜ்கமல் நிறுவனம் அந்த தலைப்பை அறிவித்திருக்கும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திடம் டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் புகார் கொடுத்துள்ளது. மாயோன் திரைப்படம் கிருஷ்ணர் கடவுளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில் சேயோன் படத்தை முருக கடவுளை மையமாக வைத்து எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan