இலங்கையில் எரிவாயுத் தட்டுப்பாடு? லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
19 மாசி 2026 வியாழன் 14:02 | பார்வைகள் : 1575
எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், தம்மிடம் போதுமானளவு இருப்பு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாகத் தேவையற்ற வகையில் பதற்றமடைய வேண்டாம் என அந்த நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெப்ரவரி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தாங்கள் ஏற்கனவே 284,000 வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று (19) முதல் சனிக்கிழமை வரை மேலும் 351,000 வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan