இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் தகுதி முதல்-அமைச்சர்க்கு உள்ளது: கார்த்தி சிதம்பரம்
19 மாசி 2026 வியாழன் 13:42 | பார்வைகள் : 264
சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-மாணிக்கம் தாகூர் எம்.பி. எக்ஸ் தளத்தில் பதிவிட்டது பாரதியார் பாடல். அதை பதிவிடுவதால் எந்த சர்ச்சையும் கிடையாது. இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்குகிறது.
தமிழகத்தில் தி.மு.க. தலைமை தாங்குகிறது.தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தரப்பில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல தி.மு.க. தரப்பில் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுக்கள் 22-ந் தேதி கூடி பேச்சு வார்த்தை நடத்த உள்ளன. அதில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள்? எத்தனை தொகுதிகள்? என்பதெல்லாம் பேசி முடிவு செய்த பின்னர்தான் மற்றது எல்லாம்.
கட்சியில் பல பேர் பல கருத்துகளை கூறுவார்கள். அது கட்சி தலைமையின் கருத்தல்ல.இந்தியா கூட்டணி தலைமை பொறுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்க வேண்டும் என தற்போது ஒரு கருத்து பரவி வருகிறது. இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் தகுதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. முதலில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வோம். பிறகு ஆட்சியில் பங்கு குறித்து பேசுவோம் என்பதே எனது கருத்து. சட்டமன்ற கூட்டத்தொடர் நடப்பதாலேயே காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கரை முதல்-அமைச்சர் சந்திக்கவில்லை.
மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கியதை வரவேற்கிறேன். இதுபோல் நேரடியாக மக்கள் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தலாம். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருந்தால் வெற்றி கண்டிப்பாக வரும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan