இந்தியாவுக்கு எப்போது வருவேன் என்பதை உறுதியாக கூற முடியாது: கோர்ட்டில் மல்லையா
19 மாசி 2026 வியாழன் 10:26 | பார்வைகள் : 227
இந்தியாவுக்கு எப்போது வருவேன் என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது' என, மும்பை உயர் நீதிமன்றத்தில், தப்பியோடிய பொருளாதார குற்றவாளி விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
நம் நாட்டின் வங்கிகளிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், 2016ல் ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, தொழிலதிபர் விஜய் மல்லையா, 70, தப்பிச் சென்றார்.
அவரை, தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவித்த மத்திய அரசு, நாடு கடத்தும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தடை தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவித்ததை எதிர்த்தும், அதற்குரிய சட்டத்தை எதிர்த்தும், மும்பை உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனு தாக்கல் செய்தார்.
கடந்த வாரம் இதை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி கவுதம் அங்காட் தலைமையிலான அமர்வு, 'நீங்கள் முதலில் இந்தியா திரும்புவீர்களா, இல்லையா என்பதை தெளிவுபடுத்தினால் மட்டுமே, வழக்கை விசாரிக்க முடியும்' என திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் விஜய் மல்லையா நேற்று அளித்த பதில்:
பிரிட்டனில் உள்ள நீதிமன்றங்கள், சர்வதேச பயணம் மேற்கொள்ள எனக்கு தடை விதித்துள்ளன. அதனால், இந்தியாவுக்கு எப்போது வருவேன் என்பதை உறுதியாக கூற முடியாது. மேலும், என் இந்திய பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற சட்டச் சிக்கல்களால், இந்தியாவுக்கு வரும் தேதியை துல்லியமாக கூற முடியாது.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
கேள்வி இதை ஏற்காத நீதிபதிகள், 'நீங்கள் நீதிமன்ற நடைமுறைகளை தவிர்க்கிறீர்கள் என்பதை நாங்கள் பதிவு செய்ய வேண்டியிருக்கும். வழக்கின் நிலுவைத் தன்மையை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடியாது.
பிரிட்டன் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து பேசும் நீங்கள், அவற்றை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளீரா?' என, விஜய் மல்லையாவுக்கு கேள்வி எழுப்பினர்.
இந்தியாவுக்கு திரும்புவது குறித்து முறையாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விஜய் மல்லையாவுக்கு மீண்டும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை மார்ச் 11க்கு ஒத்திவைத்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan