ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
16 மாசி 2026 திங்கள் 13:35 | பார்வைகள் : 1299
டெல்லி பாரத் மண்டபத்தில் இந்திய ஏ.ஐ. தாக்கம் உச்சி மாநாடு இன்று முதல் 20-ந் தேதிவரை நடக்கிறது. அதனுடன் அதே மண்டபத்தில் 'இந்திய ஏ.ஐ. தாக்கம் கண்காட்சி-2026' என்ற கண்காட்சியும் இன்று முதல் 20-ந் தேதிவரை நடக்கிறது.இந்த கண்காட்சியை பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏ.ஐ. துறையில் மத்திய அரசின் செயல்பாடுகளை விளக்கும்வகையில் இக்கண் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 10 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள் ளன. அவற்றில் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், புத்தொழில் நிறுவ னங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், சர்வதேச பங்குதாரர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் நிகழ்வாக இது அமையும்.
ரஷியா. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 13 நாடு களின் அரங்குகளும் இடம்பெறும். நேரடி செயல் விளக்கங்களும் காண லாம். 500-க்கு மேற்பட்ட அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 600-க்கு மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.5 நாட்களில் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையா ளர்கள் வருவார்கள் என்று கருதப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan