எப்ஸ்டீனின் விமானத்தில் பயணம் செய்த முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ
13 மாசி 2026 வெள்ளி 13:14 | பார்வைகள் : 1643
எப்ஸ்டீனின் தனிப்பட்ட விமானத்தில் லண்டன் வந்த இளம் பெண் ஒருவரை முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்துச் சென்ற விவகாரத்தில் பொலிசார் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
எப்ஸ்டீனின் Lolita விமானத்தில் லண்டன் வந்த குறித்த இளம் பெண்ணை Mrs Windsor என்ற புனைப்பெயரில் ஆண்ட்ரூ பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பிரித்தானியாவில் மட்டும் அந்த Lolita விமானம் 90 முறை தரையிறங்கியுள்ளதாகவே தரவுகள் உறுதி செய்கின்றன. 2008ல் எப்ஸ்டீன் சிறார் துஸ்பிரயோக வழக்கில் தண்டிக்கப்பட்டதன் பின்னரும் அவரது Lolita விமானம் பிரித்தானியாவுக்கு வந்துள்ளது.
பிரித்தானியாவின் நான்காவது பரபரப்பு மிகுந்த விமான நிலையமான Stansted-ல் தரையிறங்கும் Lolita விமானம், அங்கிருந்தே ஆண்ட்ரூ உட்பட பலரும் பெண்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் கொந்தளித்த முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன், இதை இதுவரை நடந்த மிகப்பெரிய முறைகேடு என்று குறிப்பிட்டு, ஆண்ட்ரூ மீது குற்றவியல் விசாரணையைத் தொடங்க ஸ்காட்லாந்து யார்டை வலியுறுத்தியுள்ளார்.
Stansted விமான நிலையம் தொடர்பில் வெளியான தரவுகள் மட்டுமே அவர்கள் ஆண்ட்ரூவை விசாரிக்க கட்டாயப்படுத்துகின்றன. ஆண்ட்ரூ தொடர்பான விசாரணைகள் விமானங்களின் முக்கிய ஆதாரங்களை முறையாக சரிபார்க்கவில்லை என்று எனக்கு தனிப்பட்ட முறையில் கூறப்பட்டது என்றும் கோர்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.
மேலும், எப்ஸ்டீன் வலையில் சிக்கியதில் குறைந்தது ஒருவர் அந்த Lolita விமானத்தில் பிரித்தானியாவிற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள ஆண்ட்ரூவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இன்று தரவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரண்மனை உதவியாளர்களிடமும் Mrs Windsor தொடர்பில் குறிப்பிட்டு, உதவி செய்ய ஆண்ட்ரூ கோரியுள்ளார். கசிந்த தகவலின் அடிப்படையில், Mrs Windsor என்ற பெயரைப் பயன்படுத்தி இன்னொரு பெண்ணும் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்ததாக தெரிய வந்துள்ளது.
மேலும், எப்ஸ்டீன் தனது நண்பர் ஆண்ட்ரூவுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒரு தனிப்பட்ட இரவு விருந்திற்கு இளம் ருமேனிய மொடல் ஒருவரை அழைத்துச் சென்றது கடந்த ஞாயிறன்று வெளிச்சத்திற்கு வந்தது.
எப்ஸ்டீனின் Lolita விமானம் Stansted மட்டுமின்றி ஹீத்ரோ விமான நிலையத்திலும் தரையிறங்கியுள்ளது.
இங்கிலாந்தின் தெற்கில் அதிகம் அறியப்படாத விமான நிலையங்களிலும் Lolita விமானம் தரையிறங்கியுள்ளது.
எசெக்ஸில் உள்ள மறைவிடத்தில் பெண்கள் ஒரு எப்ஸ்டீன் விமானத்திலிருந்து மற்றொரு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக கோர்டன் பிரவுன் கூறியுள்ளார்.
விமானப் பதிவுகளில் பெயர் குறிப்பிடப்படாத பயணிகளை பெண் என்று மட்டுமே பெயரிடப்பட்டிருப்பதையும், ஆண் பயணிகளின் பெயர்களும் குறிப்பிடவில்லை என்பதையும் கோர்டன் பிரவுன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், எப்ஸ்டீன் மற்றும் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்ட வர்ஜீனியா கியூஃப்ரேவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆண்ட்ரூவை அதிகாரிகள் ஒருபோதும் விசாரித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan