Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் பாடசாலைகளில் குழந்தைகளிடம் தவறான நடத்தை: இரண்டு அனிமேட்டர்கள் பணிநீக்கம்!!

பரிஸ் பாடசாலைகளில்  குழந்தைகளிடம் தவறான நடத்தை: இரண்டு அனிமேட்டர்கள் பணிநீக்கம்!!

30 தை 2026 வெள்ளி 21:05 | பார்வைகள் : 1688


பரிஸில் பாடசாலை நேரத்துக்கு வெளியான செயல்பாடுகளில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பாக, “Cash Investigation” நிகழ்ச்சி வெளியிட்ட அதிர்ச்சி தரும் காட்சிகளைத் தொடர்ந்து, இரண்டு அனிமேட்டர்களை (animatrices) பரிஸ் மாநகராட்சி உடனடியாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. 

அவர்கள் குழந்தைகளை வாயில் முத்தமிடுவதும், கடுமையாக கத்துவதும் செய்ததாக அந்தக் காட்சிகளில் தெரிகிறது. இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, பரிஸ் நகராட்சி நிர்வாக விசாரணை ஒன்றை தொடங்கியுள்ளது. பாடசாலையில் பெற்றோர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விசாரணை நடந்து கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

பெற்றோர் குழுக்கள் இந்த நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தீவிர கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், தேசிய கல்வி அமைச்சர் எட்வார்ட் ஜெஃப்ரே (Edouard Geffray), குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 40-ஆவது பிரிவின் அடிப்படையில் பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

மேலும், நிர்வாக கட்டுப்பாடு மற்றும் தண்டனை நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் கூறினார். பரிஸ் மேயர் பதவிக்கான வேட்பாளர்களும் இந்தச் சம்பவங்களை கடுமையாக கண்டித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்