Paristamil Navigation Paristamil advert login

தவெக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்; முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

தவெக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்; முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

29 தை 2026 வியாழன் 07:30 | பார்வைகள் : 717


தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூடம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், தவெக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டசபை தேர்தல் பணிகள், தேர்தல் பிரசாரம் உள்பட பல்வேறு விவகாரக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்