கிரீஸில் பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து - 03 பேர் பலி
26 தை 2026 திங்கள் 13:13 | பார்வைகள் : 203
மத்திய கிரீஸ் நகரமான திரிகலா அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 03 பேர் பலியாகியுள்ளதாகவும், இரண்டு பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலையில் வயலண்டா பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து இடம்பெற்றது.
தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு அங்கு வெடிப்பு சத்தம் கேட்டதாகக் கூறப்படுவதோடு, தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தீ விபத்தில் காயமடைந்த 06 பேரும் தீயணைப்பு வீரர் ஒருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை எனவும், சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சர் அடோனிஸ் ஜார்ஜியாடிஸ் தெரிவித்துள்ளார்.
தீயை அணைக்க 40 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 13 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கிரீஸ் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan