Paristamil Navigation Paristamil advert login

போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர நிபந்தனை முன்வைத்த ஈரான் ஜனாதிபதி!

போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர நிபந்தனை முன்வைத்த ஈரான் ஜனாதிபதி!

12 பங்குனி 2026 வியாழன் 04:53 | பார்வைகள் : 1295


தற்போதைய போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

அமைதியை நிலைநாட்ட வேண்டுமானால் சர்வதேச சமூகமும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இந்த விடயங்களில் அவசரமாக கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள், அதாவது ஈரானிய ஆட்சியின் இறையாண்மை மற்றும் உரிமைகள் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மோதல்களினால் ஏற்பட்ட அழிவுகளுக்காக நியாயமான இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புகள் அல்லது தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாது என்பதற்கான நிரந்தர சர்வதேச பிணை மற்றும் உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்