Paristamil Navigation Paristamil advert login

வசூலில் மிரட்டும் அஜித்தின் 50-வது படம்!

வசூலில் மிரட்டும் அஜித்தின் 50-வது படம்!

26 தை 2026 திங்கள் 12:55 | பார்வைகள் : 1016


தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் டிரெண்ட் தற்போது உச்சத்தில் உள்ளது. அந்த வரிசையில், 'தல' அஜித்தின் 50-வது படமான மங்காத்தா, டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு மீண்டும் வெளியானது. 2011-ல் எப்படி ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியதோ, அதே போன்றதொரு வரவேற்பை 2026-லும் இப்படம் பெற்றுள்ளது. வில்லத்தனமான நாயகன், அதிரடி பின்னணி இசை என வெங்கட் பிரபு - அஜித் கூட்டணி திரையரங்குகளை திருவிழா கோலமாக மாற்றியுள்ளது.

இதற்கு முன்பு விஜய்யின் 'கில்லி' ரீ-ரிலீஸ் முதல் நாளில் செய்திருந்த ₹3.50 கோடி (TN) வசூல் சாதனையை மங்காத்தா முறியடித்து, ரீ-ரிலீஸில் அதிக வசூல் செய்த படமாக முதலிடம் பிடித்துள்ளது.

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சில நாட்களிலேயே இப்படம் உலகம் முழுவதும் ₹14 கோடி முதல் ₹15 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே 1 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது மங்காத்தா.

திரையரங்குகள் முழுவதும் அஜித்தின் கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதும், திரையில் அவர் தோன்றும் போது ரசிகர்கள் நடனமாடுவதும் எனப் பெரும் ஆரவாரம் நிலவுகிறது. குறிப்பாக, சென்னை ரோகிணி மற்றும் காசி திரையரங்குகளில் திருவிழா போன்ற சூழல் காணப்பட்டது. இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் மகத், வைபவ் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். யுவன் ஷங்கர் ராஜாவின் 'தீம் மியூசிக்' ஒலிக்கும் போதெல்லாம் திரையரங்குகள் அதிர்கின்றன.
"
"எத்தனை நாள் தான் நானும் நல்லவனாவே நடிக்கிறது" என்ற அஜித்தின் அந்த வசனம் இன்றும் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 'மங்காத்தா 2' எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூழலில், இந்த ரீ-ரிலீஸ் வெற்றி அஜித்தின் மார்க்கெட் வலுவாக இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

 

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026