Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவில் மண்சரிவு அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

இந்தோனேசியாவில் மண்சரிவு அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

26 தை 2026 திங்கள் 06:17 | பார்வைகள் : 1038


இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தின் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை 24.01.20226 ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ச்சியான கனமழை காரணமாக மேற்கு ஜாவாவின் மேற்கு பாண்டுங் பகுதியில் உள்ள கிராமங்களில் சனிக்கிழமை அதிகாலை மண்சிரிவு ஏற்பட்டது. 

இதனால் பல குடியிருப்புகள் மண்ணில் புதைந்ததுடன், பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

கனமழை காரணமாக இரவு முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமை (25) மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் அந்நாட்டு மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஜாவா மாகாணத்தின் பல பகுதிகளில், இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவையும் உள்ளடக்கிய வகையில் வெள்ளப்பெருக்குகள் பதிவாகியுள்ளன. 

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்