Paristamil Navigation Paristamil advert login

ஆட்சியில் பங்கு குறித்து பேசக்கூடாது: மாணிக்கம் தாகூருக்கு ராகுல் கண்டிப்பு

ஆட்சியில் பங்கு குறித்து பேசக்கூடாது: மாணிக்கம் தாகூருக்கு ராகுல் கண்டிப்பு

25 தை 2026 ஞாயிறு 09:07 | பார்வைகள் : 230


தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துக்களை பொதுவெளியில் பேசக்கூடாது என ராகுல் தெரிவித்தார், என்று காங்., - -எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

மதுரையில் அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு ஆகியவை தொடர்பாக, டில்லியில், காங்., தலைவர் கார்கே, ராகுல் எம்.பி., ஆகியோர் எங்களது தனிப்பட்ட கருத்துக்களை கேட்டனர். மேலும், இந்த கருத்துக்களை வெளியில் பேசக்கூடாது எனவும் எங்களிடம் கூறினர்.

முன்னாள் பிரதமர்கள் நேரு முதல் மன்மோகன் சிங் வரை, தமிழகத்திற்கு வந்தால் ஆங்கிலத்தில் பேசுவது வழக்கம். ஆனால், பிரதமர் மோடி, தமிழ் மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் ஹிந்தியில் பேசியுள்ளார்.

மதுராந்தகத்தில் நடந்த பிரசார கூட்ட மேடையில் பிரதமர் மோடியும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் வெகு நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் எந்த மொழியில் பேசினர் என தெரியவில்லை. ஆனால், அது ஆச்சரியமாக இருந்தது. பழனிசாமிக்கு ஹிந்தி தெரிந்து விட்டதா அல்லது மோடிக்கு தமிழ் தெரிந்து விட்டதா?

கடந்த 2019ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, 2026 ஜனவரியில் திறக்கப்படும் என்றனர். தற்போது, இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்கின்றனர்.

தேர்தல் அறிவிப்பு வெளியாவதால், திறப்பு விழா விற்கு வாய்ப்பே இல்லை. அதனால்தான், பிரதமர் மோடி, மதுரையில் கூட் டம் நடத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்