Paristamil Navigation Paristamil advert login

5 நிமிடத்தில் ஸ்மார்ட்போன் கவர் - துபாயில் அசத்தும் மேஜிக் இயந்திரம்

5 நிமிடத்தில் ஸ்மார்ட்போன் கவர் - துபாயில் அசத்தும் மேஜிக் இயந்திரம்

23 தை 2026 வெள்ளி 14:29 | பார்வைகள் : 522


உக்ரைன் நாட்டை சேர்ந்த இணையதள பிரபலம் டெடியானா ஸ்கோரினா(tetiana Skoryna) என்பவர் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

துபாயில் வசிக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த டெடியானா ஸ்கோரினா(tetiana Skoryna) என்பவர் Instant போன் கவர் குறித்து இணையத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

துபாயில் வணிக வளாகத்தில் உள்ள தானியங்கி இயந்திரம்(Vending Machine) மூலம்  டெடியானா ஸ்கோரினா தன்னுடைய iPhone 17 Pro Max ஸ்மார்ட்போனுக்கான அழகிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கவரை பெற்றுக் கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆன்லைனில் நமக்கு பிடித்த செல்போன் கவருக்காக ஆர்டர் செய்துவிட்டு நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் இந்த புதிய தொழில்நுட்பம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தானியங்கி இயந்திரத்தில் உள்ள திரையில் உங்கள் ஸ்மார்ட்போன் மாடலை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் அதில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, உங்கள் ஸ்மார்ட்போன் கேலரியில் உள்ள உங்கள் விருப்ப படத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும், திரையில் தோன்றும் நீங்கள் தேர்ந்தெடுத்த புகைப்படத்தை நீங்கள் சுருக்கவோ அல்லது விரிக்கவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் டிசைனை நீங்கள் உறுதி செய்த சில நிமிடங்களிலேயே உங்கள் ஸ்மார்ட்போனுக்கான அழகிய பின்புற கவர் உங்கள் கையில் கிடைக்கும்.

இந்த அனுபவம் குறித்து டெடியானா தன்னுடைய பதிவில், இது எனக்கு மிகவும்  பிடித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

பதிவில் கருத்து தெரிவித்துள்ள பயனர் ஒருவர், துபாயில் அனைத்தும் கிடைக்கும், நினைத்த நேரத்தில்  ஸ்மார்ட்போன் கவர் கிடைக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்