ஒவ்வொரு துடுப்பாட்ட நிலையிலும் அதிக ஓட்டங்கள் -எட்டா உயரத்தில் இலங்கை, இந்திய ஜாம்பவான்கள்
23 தை 2026 வெள்ளி 13:00 | பார்வைகள் : 179
சச்சின் டெண்டுகல்கர், சனத் ஜெயசூரியா உட்பட துடுப்பாட்ட வரிசையின் ஒவ்வொரு இடத்திலும் ஜாம்பவான்கள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக திகழும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar), தொடக்க வீரராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ளார்.
அவரது நீண்ட கால கிரிக்கெட், நுட்பம் மற்றும் சீரான செயல்பாடு ஆகியவற்றின் மூலம் 15,310 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூரியா (Sanath Jayasuriya) தொடக்க வீரராக 12,740 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தவர் ஆவார்.
இவரது ஆக்ரோஷமான துடுப்பாட்ட அணுகுமுறை, Powerplay காலகட்டத்தில் ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்ட விதத்தையே மாற்றியது.
இந்திய கிரிக்கெட் அணியில் (ஒருநாள் போட்டி) ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோஹ்லி (Virat Kohli), மூன்றாவது துடுப்பாட்ட வரிசையில் 12,676 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
நெருக்கடியான சூழ்நிலைகளில் சதம் விளாசி, பலமுறை இந்திய அணியை காப்பாற்றியுள்ளார் கோஹ்லி.
நியூசிலாந்தின் முன்னாள் வீரரான ராஸ் டெய்லர் (Ross Taylor), நான்காவது துடுப்பாட்ட வரிசையில் 7,690 ஓட்டங்கள் குவித்தவர் ஆவார்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சிக்ஸர்களை பறக்கவிட்ட டெய்லர், இந்த வரிசையில் சிறந்த வீரராக விளங்கினார்.
இலங்கை முன்னாள் வீரரான அர்ஜுனா ரணதுங்கா (Arjuna Ranatunga) தந்திரோபாய ரீதியாக சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 5வது துடுப்பாட்ட வரிசையில் களமிறங்கி 4,675 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான எம்.எஸ்.தோனி (MS Dhoni), ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் வல்லவர் ஆவார். இவர் 6வது வரிசையில் 4,164 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
நியூசிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் வீரர் கிறிஸ் ஹாரிஸ் (Chris Harris). இவர் நம்பகமான கீழ்-நடுவரிசை வீரர் ஆவார். ஹாரிஸ் முக்கியமான நேரங்களை பொறுப்பாக ஆடி 2,130 ஓட்டங்கள் குவித்தார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வாஸிம் அக்ரம் (Wasim Akram), ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையாளர் ஆவார்.
அதே சமயம் 8வது வரிசையில் பல சமயங்களில் ஓட்டங்களை சேர்த்து அணிக்கு பலம் சேர்த்துள்ளார். இவர் 1,208 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
வங்காளதேச அணியின் மூத்த வீரரான மஷ்ரஃபே மோர்தசா (Mashrafe Mortaza), 9வது இடத்தில் 701 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
கீழ்வரிசையில் போராடும் வீரரான மோர்தசா, அணிக்காக பல சமயங்களில் முக்கிய கட்டத்தில் ஓட்டங்களை எடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாக்கர் யூனிஸ் (Waqar Younis), அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக இருந்தாலும், ஓரளவு ஓட்டங்களை சேர்க்கக்கூடியவராகவும் இருந்தார். இவர் 10வது வரிசையில் விளையாடி 478 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்ட் (Trent Boult) கடைசி வரிசையில் களமிறங்கினாலும், அவரது பங்களிப்புகளாக ஒவ்வொரு ரன்னும் முக்கியத்துவம் பெற்றது. அவர் 176 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan