Paristamil Navigation Paristamil advert login

தனி விமானங்களில் இந்தியாவை விட்டு வெளியேறும் அணிகள்

 தனி விமானங்களில் இந்தியாவை விட்டு வெளியேறும் அணிகள்

7 பங்குனி 2026 சனி 15:07 | பார்வைகள் : 916


இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் வார இறுதியில் இந்தியாவில் இருந்து தாயகம் திரும்ப உள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் மோதலால் வான்வெளி கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இதனால் வணிக விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டன.

இதன் காரணமாக நடப்பு உலகக்கிண்ணத்தில் வெளியேறிய இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளால் தாயகம் திரும்ப முடியவில்லை.

சனிக்கிழமை மாலை மும்பையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமானத்தில் இங்கிலாந்து அணி புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக PTI-யிடம் வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவும், மேற்கிந்திய தீவுகளும் கொல்கத்தாவில் இருந்து மற்றொரு தனி விமானத்தில் ஒன்றாக பயணிக்க உள்ளன என்று தெரிய வந்துள்ளது.

இரு தரப்பினரும் முதலில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு செல்லும் என்றும், பின் மேற்கிந்திய தீவுகள் ஆன்டிகுவாவிற்கு பறக்கும் என்றும் கூறப்படுகிறது.

சரியான புறப்படும் நேரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஞாயிற்றுக்கிழமை விமானம் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

எழுத்துரு விளம்பரங்கள்