ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்- 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்....
23 தை 2026 வெள்ளி 12:48 | பார்வைகள் : 194
மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சிக் கிண்ணத் தொடரின் முதல் இன்னிங்ஸில் கோவா அணி 209 ஓட்டங்களுக்கு சுருண்டது.
புனேயில் கோவா மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக் கிண்ணத் தொடர் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற கோவா அணி துடுப்பாட்டதை தொடங்கியது. அணித்தலைவர் ஸ்நேஹல் கௌதங்கர் மட்டும் நிலைத்து நின்று ஆட, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
குறிப்பாக, அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar) துடுப்பாட்டத்தில் சொதப்பினார். அவர் 18 பந்துகளில் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
ஜலஜ் சக்சேனாவின் மிரட்டலான பந்துவீச்சில் கோவா அணி 209 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஸ்நேஹல் கௌதங்கர் (Snehal Kauthankar) 73 ஓட்டங்கள் எடுத்தார்.
அபாரமாக பந்துவீசிய ஜலஜ் சக்சேனா (Jalaj Saxena) 6 விக்கெட்டுகளும், ராமகிருஷ்ணா மற்றும் விக்கி ஓஸ்ட்வால் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan