Paristamil Navigation Paristamil advert login

திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் மக்கள் வேதனை: அமித்ஷா

திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் மக்கள் வேதனை: அமித்ஷா

22 தை 2026 வியாழன் 09:27 | பார்வைகள் : 102


திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் வேதனைடைந்து உள்ளனர், என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

தினகரன் தலைமையிலான அமமுக, தேஜ கூட்டணியில் இணைந்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த தினகரன் கூட்டணியை உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அமித்ஷா தமிழில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது :

eவளமான தமிழகம் - வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி. தினகரன் தலைமையிலான அமமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை நான் வரவேற்கிறேன்.திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் வேதனைடைந்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருப்பதை ஆசீர்வதிக்க தயாராக இருக்கின்றனர். இவ்வாறு அந்த பதிவில் அமித்ஷா கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்