தூள் பறக்கும் சுந்தர் சி ‘புருஷன்’ பட புரோமோ வெளியானது……!
21 தை 2026 புதன் 15:34 | பார்வைகள் : 187
தமிழ் திரையுலகில் சக்சஸ்ஃபுல் கூட்டணியாக விஷால் - சுந்தர் சி கூட்டணி இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் முதல் முதலில் இணைந்து பணியாற்றிய படம் மதகஜராஜா. ஆனால் அப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே இவர்கள் கூட்டணியில் ஆம்பள திரைப்படம் திரைக்கு வந்தது. அப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து ஆக்சன் என்கிற திரைப்படத்தில் பணியாற்றினர். அப்படம் பெரியளவில் வெற்றியடையவில்லை.
இவர்கள் முதன் முதலில் இணைந்து பணியாற்றிய மதகஜராஜா திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படம் 12 வருட காத்திருப்பதற்குப் பின்னர் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மதகஜராஜா வெற்றிக்கு பின்னர் சுந்தர் சி யும், விஷாலும் மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் அவர்கள் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
விஷால் சுந்தர் சி இணையும் புதிய படத்தை அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் சார்பாக குஷ்பூவும் அவரது மகள் அனந்திதாவும் தயாரிக்கிறார்கள். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். இப்படத்திற்கு புருஷன் என பெயரிட்டு உள்ளனர். இப்படத்தின் புரோமோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆரம்பத்தில் தமன்னாவின் கணவரான விஷால் சாந்தமாக வீட்டு வேலைகளை செய்கிறார். அதன்பின் யோகிபாபு வீட்டுக்கு வர அவருக்காக டீ போட அடுப்படிக்குள் சென்ற அவர் ஆக்ஷன் மோடுக்கு மாறுகிறார்.
வீட்டுக்குள் வரும் ரெளடிகளை சத்தமே கேட்காமல் அடிச்சு நாக் அவுட் பண்ணுகிறார். அதை யோகிபாபு மட்டும் பார்த்து ஷாக் ஆகிப்போகிறார். மனைவி முன் சாந்தமாக இருக்கும் விஷால், ஏன் அவருக்கு தெரியாமல் அடிதடியில் இறங்குகிறார். விஷாலை கொல்ல வந்த ரெளடிகள் யார் என்பதை ஆக்ஷன் கலந்த காமெடி விருந்தாக இப்படம் கொடுக்கும் என்பது புரோமோவிலேயே தெரிகிறது.
இயக்குனர் சுந்தர் சி கைவசம் தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உள்ளது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் அப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. அப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த ஆண்டு மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இதை எடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 173 திரைப்படத்தை சுந்தர் சி இயக்க கமிட்டாகி இருந்தார். அதற்கான அறிவிப்பு வெளிவந்த ஒரே வாரத்தில் அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சுந்தர் சி.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan