Paristamil Navigation Paristamil advert login

அஜித் அண்ணன் நடிகர் ஆனார்

அஜித் அண்ணன் நடிகர் ஆனார்

5 பங்குனி 2026 வியாழன் 15:02 | பார்வைகள் : 1440


நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தை பொது வெளிக்கு கொண்டு வருவதே இல்லை. மனைவி ஷாலினி ஒரு நடிகை என்பதால் அவ்வப்போது அவர் மட்டுமே மீடியா வெளிச்சத்திற்கு வருவார். அதனால் அஜித்திற்கு அனில் குமார் என்ற ஒரு அண்ணன் இருப்பதும் வெளி உலகத்திற்கு அதிகமாக தெரியாது. அவர் 'ஜோடி365.காம்' என்ற திருமண தகவல் மையத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அனில் குமார் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுபற்றிய தகவலை அனில் குமார் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''திருமண தகவல் சேவை நடத்தி வரும் நான், தற்போது ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறேன். 'கோகோ அண்ட் நட்' என்ற சர்வதேச ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளேன். இப்படத்தில் நான் ஒரு கதாபாத்திரமாக அல்லாமல், நிஜ வாழ்க்கையில் ஒரு வெற்றிகரமான மேட்ச் மேக்கராக (திருமண புரோக்கர்) இருப்பது போலவே, திரையிலும் மிஸ்டர் மேட்ச் மேக்கராகவே நடிக்கவுள்ளேன்” என அனில் குமார் பதிவிட்டுள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்