சிக்கந்தர் படம் தொடர்பில் மனம் திறந்த ராஷ்மிகா
21 தை 2026 புதன் 15:28 | பார்வைகள் : 406
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அங்குள்ள இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தமிழில் சுல்தான், வாரிசு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். விஜயின் தீவிர ரசிகை இவர். கடந்த சில வருடங்களாகவே பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.
அதிலும் அவர் நடித்த அனிமல் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை பெற்றது. அதேபோல் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த புஷ்பா 2 திரைப்படமும் 1800 கோடி வசூலை பெற்றது. அதாவது, ராஷ்மிகா நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஆயிரம் கோடி வசூலை பெற்று வருகிறது.
ஒருபக்கம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படத்திலும் ராஷ்மிகா நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது. இந்த படம் பற்றி ஏற்கனவே ஊடகங்களில் பேசிய முருகதாஸ் ‘சல்மான்கான் இரவில் மட்டுமே படபிடிப்புக்கு வருவார்.. எனவே நான் எழுதிய கதையை இயக்க முடியவில்லை.. இந்த பட தோல்விக்கு அவர்தான் காரணம்’ என சொல்லியிருந்தார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா ‘ஆரம்பத்தில் முருகதாஸ் சார் சிக்கந்தர் கதையை என்னிடம் சொன்னபோது அது வேறாக இருந்தது.. ஆனால் படமாக எடுத்த போது அது வேறாக மாறியிருந்தது.. இதுபோன்ற விஷயங்கள் சினிமாவில் பொதுவக நடக்கும்.. ரிலீஸ் தேதிக்கு ஏற்ப மாற்றங்களும், திருத்தங்களும் நடக்கும்.. அது சிக்கந்தரில் நடந்தது’ என சொல்லியிருக்கிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan