Paristamil Navigation Paristamil advert login

2026-ல் 5 மேம்பட்ட அம்சங்களுடன் iPhone 18 தொடரை அறிமுகம் செய்யும் Apple

2026-ல் 5 மேம்பட்ட அம்சங்களுடன் iPhone 18 தொடரை அறிமுகம் செய்யும் Apple

20 தை 2026 செவ்வாய் 17:36 | பார்வைகள் : 457


Apple நிறுவனம், வரும் செப்டம்பர் 2026-இல் தனது புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த முறை, iPhone வரிசையில் 5 முக்கிய மேம்பாடுகள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கியமாக, Under-Screen Face ID தொழில்நுட்பம் அறிமுகமாகிறது. இதன் மூலம், Face ID சென்சார்கள் திரையின் கீழ் மறைக்கப்பட்டு, முன்புறம் சுத்தமான, இடையூறு இல்லாத டிஸ்ப்ளே கிடைக்கும். Selfie கமெரா மட்டும் சிறிய ஹோல் வடிவில் மேல்புறத்தில் இருக்கும்.

அதேபோல், Dynamic Island வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படலாம். இது சிறியதாகவோ அல்லது வேறு இடத்தில் அமைக்கப்படவோ வாய்ப்பு உள்ளது. 
கமெராவை பொறுத்தவரை, Variable Aperture System கொண்ட புதிய மேம்பாடு வரவுள்ளது. இதன் மூலம், குறைந்த வெளிச்சத்தில் கூட சிறந்த புகைப்படங்கள் எடுக்க முடியும். குறிப்பாக, இந்த அம்சம் iPhone 18 Pro Max-க்கு மட்டும் கிடைக்கக்கூடும்.

செயல்திறனை பொறுத்தவரை, புதிய A20 Pro Chip அறிமுகமாகும். இது TSMC 2nm process அடிப்படையில் உருவாக்கப்பட்டதால், வேகமும், power efficiency-யும் அதிகரிக்கும். RAM, CPU, GPU, Neural Engine ஆகியவை ஒரே wafer-இல் ஒருங்கிணைக்கப்படலாம்.

மேலும், புதிய நிறங்கள் (Burgundy, Brown, Purple) அறிமுகமாகும். Pressure-based Camera Button போன்ற ஹார்ட்வேர் மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

iPhone 18 Pro Series, Apple-ன் மிகப்பெரிய வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை கொண்டுவரும் என உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்