Paristamil Navigation Paristamil advert login

சூர்யாவின் ‘கருப்பு’ எப்போது வெளியாகிறது?

சூர்யாவின் ‘கருப்பு’  எப்போது  வெளியாகிறது?

20 தை 2026 செவ்வாய் 15:09 | பார்வைகள் : 232


சூர்யாவின் 45வது படமான கருப்பு (Karuppu), ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ் (நடராஜன் சுப்பிரமணியம்), சுவாசிகா, அனாகா மாயா ரவி, யோகி பாபு, சிவிவடா, சுப்ரீத் ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாய் அப்யங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ‘God Mode’ டிவாலி அன்று வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சூர்யாவின் மாஸ் லுக்கும், பாடலின் தீவிரமான விஷுவல்களும் ரசிகர்களை கவர்ந்தன.

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், “இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும். அதோடு ரிலீஸ் தேதி அறிவிப்பும் வரும்” என்று தெரிவித்திருந்தார். பொங்கல் பண்டிகையன்று எந்த சிறப்பு போஸ்டரோ அல்லது ரிலீஸ் அப்டேட்டோ இல்லை என்றும், படம் தயாராகி வருவதாகவும் கூறினார்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல்கள் படக்குழு ஏப்ரல் 2026 மாதத்தில் படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றன. சில ஆதாரங்கள் தமிழ் புத்தாண்டு வார இறுதியில் (ஏப்ரல் 10 அல்லது அதைச் சுற்றி) ரிலீஸ் செய்யலாம் என தெரிவிக்கின்றன. இருப்பினும், இது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை

வர்த்தக‌ விளம்பரங்கள்