Paristamil Navigation Paristamil advert login

ஒரு கார் SNCF ரயில் பாதையின் மின்கம்பிகளில் தொங்கியதால் le Havre – Paris இடையிலான போக்குவரத்து பாதிப்பு!!

ஒரு கார் SNCF ரயில் பாதையின் மின்கம்பிகளில் தொங்கியதால் le Havre – Paris இடையிலான போக்குவரத்து பாதிப்பு!!

20 தை 2026 செவ்வாய் 14:11 | பார்வைகள் : 523


ஒரு 70 வயதுடைய பெண் ரயில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகி  லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.

இந்த விபத்தின் காரணமாக, ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை le Havre மற்றும் Yvetot இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. le Havre – Paris SNCF ரயில் பாதையின் மின்கம்பிகளில் ஒரு கார் தொங்கிய நிலையில் இருந்தது இதனால் ரூவான் (Rouen) அல்லது பரிஸிலிருந்து le Havreக்கு ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து போல்பெக் (Bolbec) நகரின் avenue Louis-Debrayஇல் நிகழ்ந்துள்ளது. 74 வயதுடைய ஒரு பெண் ஓட்டுநர் லேசான காயங்களுடன் லில்ல்போன் (Lillebonne) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் 31 தீயணைப்பு வீரர்கள்  பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் மீட்பு, ஆதரவு மற்றும் தேடுதல் பிரிவைச் சேர்ந்த சிறப்பு குழுவும் உள்ளது. ரயில் போக்குவரத்து பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடங்கும் என SNCF மதிப்பீடு செய்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்