பிரதமரின் அதிரடி நடவடிக்கை! இன்று முக்கிய தீர்மானம்!
20 தை 2026 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1033
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல், அரசாங்கம் அந்தரத்தில் தத்தளிக்கிறது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத மக்ரோனின் அரசாங்கம், பட்ஜெடை நிறைவேற்ற சிறப்பு அதிகாரங்களை கையிலெடுக்க உள்ளது.
இன்று ஜனவரி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பட்ஜெட் வாசிக்கப்பட உள்ளது. அதனை வக்கெடுப்பு இன்றி நிறைவேற்றும் நோக்கில் 49.3 எனும் சிறப்பு அரசியலமைப்புச் சட்டத்தை பயன்படுத்த உள்ளார் பிரதமர் செபஸ்தியன் லுகோனு (Sébastien Lecornu).
உடனடியாகவே பாராளுமன்றத்தில் எதிர்ப்பு அலைகள் எழும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் வரவுசெலவுத்திட்டம் இல்லா நாடு, ஆட்சிக்கவிழ்ப்பை விட ஆபத்தானது என தெரிவிக்க லுகோனு, இது அரசாங்கத்தின் 'ஒரு பகுதி' தோல்வி எனவும் குறிப்பிடுகிறார்.
முந்தைய பிரதமர்கள் இதே அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி, நம்பிக்கை இல்லா பிரேரணை மூலம் அரசாங்க கலைப்பை எதிர்கொண்டிருந்தனர். பிரதமர் செபஸ்தியன் லகோனு முடிந்தவரை எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்ர்தையில் ஈடுபட்டு, ஓய்வூதியம் உள்ளிட்ட சில சில புதியசட்டங்களை தளர்த்தும், பல முயற்சிகள் எடுத்துப்பார்ர்த நிலையில், அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது.
இன்றைய பட்ஜெட் வாசிப்பில் நாட்டின் பற்றாக்குறையில் 5% சதவீதத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் இருக்கும் எனவும், RN மற்றும் LFI கட்சிகள் பட்ஜெட்டுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணைகள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan