கிரீன்லாந்து விடயத்தில் ஆதரிக்காத நாடுகளுக்கு சுங்க வரி: டிரம்ப் எச்சரிக்கை!!
17 தை 2026 சனி 13:51 | பார்வைகள் : 425
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை கைப்பற்றும் தனது திட்டத்திற்கு ஆதரவு அளிக்காத நாடுகளுக்கு சுங்க வரிகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அவசியம் என கூறிய அவர், டென்மார்க் மறுத்தாலும் இந்த ஆர்க்டிக் (l’Arctique) பிரதேசத்தை பெறும் எண்ணத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்க காங்கிரஸின் இரு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் டென்மார்க்கு மற்றும் கிரீன்லாந்துக்கு ஆதரவு தெரிவிக்க கோபன்ஹேகனுக்கு (Copenhague) பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கிரீன்லாந்தில் இராணுவ இருப்பை அதிகரித்துள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நோர்வே உள்ளிட்ட பல நாடுகள் தங்களின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான தெளிவான செய்தியாக படைகளை அனுப்பியுள்ளன. இதனால், கிரீன்லாந்து தொடர்பான சர்வதேச பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
பிரான்ஸ் ஏற்கனவே “முதல்கட்ட இராணுவ வீரர்களை” கிரீன்லாந்துக்கு அனுப்பியுள்ளது. மேலும் “அடுத்து வரும் நாட்களில்” நிலம், வான் மற்றும் கடல் சார்ந்த கூடுதல் படை வளங்களை அனுப்ப உள்ளதாக ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan