80km/h வரம்பில் செல்ல வேண்டிய சாலையில் 199 km/h வேகத்தில் பிடிபட்ட மோட்டார் சைக்கிள்!!
3 பங்குனி 2026 செவ்வாய் 08:16 | பார்வைகள் : 2562
Val-d’Oise பகுதியில் 80 கிலோமீட்டர் வேக வரம்பு உள்ள சாலையில் 199 கிமீ வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் ஜொந்தார்ம்கள் நடத்திய சோதனையில் பிடிபட்டார். அவரது ஓட்டுநர் உரிமம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே சாலையில் 140 கிலோமீட்டர் வேகத்தை மீறிச் சென்ற இரண்டு கார்கள் ஓட்டுநர்களின் உரிமங்களும் இடைநிறுத்தப்பட்டு, வாகனங்கள் இயக்கமற்றதாக மாற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகள், துறையில் நடைபெறும் மோட்டார் ‘ரோடியோ’களை கட்டுப்படுத்தும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
போலீசார் மற்றும் ஜொந்தார்ம்கள் இணைந்து அனுமதி இல்லாத மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இயங்கும் வாகனங்களை குறிவைத்து சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 2025 ஆம் ஆண்டில் இதுவரை 259 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan