தமிழர் செனுரன் முத்துசாமியின் மிரட்டலில் சூப்பர் கிங்ஸ் படுதோல்வி
15 தை 2026 வியாழன் 11:11 | பார்வைகள் : 131
SA20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
செயின்ட் ஜார்ஜ்'ஸ் பார்க்கில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணியில் குயிண்டன் டி காக் 37 பந்துகளில் 54 ஓட்டங்கள் விளாசினார்.
அதேபோல் ஜேம்ஸ் கோல்ஸ் 34 பந்துகளில் 61 ஓட்டங்கள் விளாச, சன்ரைசர்ஸ் அணி 178 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக 23 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாசினார்.
ஆனால் தமிழர் செனுரன் முத்துசாமி, ஜென்சன், கோல்ஸ் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சு ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் ஜோபர்க் அணி 18.1 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது. செனுரன் முத்துசாமி 3 விக்கெட்டுகளும், ஜென்சன் மற்றும் கோல்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan