அல்லு அர்ஜூன் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..?
14 தை 2026 புதன் 08:23 | பார்வைகள் : 1064
‘லியோ’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி படத்தில் உருவான படம் ‘கூலி’. ஆமீர்கான், சவுபின் ஷாயிர், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தார். படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும், கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என சாதனையை படைத்தது.
ரூ.500 கோடிக்கும் மேல் ‘கூலி’ வசூலை ஈட்டியது. இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை ‘டான்’ படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.
லோகேஷ் கனகராஜை பொறுத்தவரை அவர், ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால், அவர் தற்போது அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அல்லு அர்ஜூனின் 23ஆவது படமாக உருவாகும் இந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
கூலி திரைப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் 50 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றார். தற்போது அல்லு அர்ஜூன் படத்திற்காக 75 கோடிரூபாயை அவர் ஊதியமாக பெற உள்ளதாக தெரிகிறது. ஜூன் அல்லது ஜூலை மாததத்தில் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
தற்போது அல்லு அர்ஜூன் அட்லீ இயக்கும் ‘AA22xA6 Part 1’ படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படம் 2028-ல் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan