140 ஆண்டு நீளமுள்ள வீடியோ - யூடியூபில் உள்ள மர்மம்
13 தை 2026 செவ்வாய் 10:57 | பார்வைகள் : 145
பிரபல வீடியோ பகிரும் தளமான யூடியூபில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.
இதில் ஒவ்வொரு வீடியோவும் சில வினாடிகளில் இருந்து பல மணி நேரங்கள் வரை பதிவேற்றம் செய்யப்படுவது உண்டு.
ஆனால், 140 ஆண்டு நீளமுள்ள வீடியோ ஒன்று யூடியூபில் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
@shinywr என்ற பெயரில் உள்ள யூடியூப் சேனலில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.
இதே போல், 294 மணி நேர வீடியோ ஒன்றும், 150 மணி நேர நீளமுள்ள ரீல்ஸ் ஒன்றும் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த யூடியூப் சேனல் கடந்த 2023 ஆம் ஆண்டு வடகொரியாவில் துவங்கப்பட்டதாக காட்டப்படுகிறது.
ஆனால், 140 ஆண்டு நீளமுள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கும் போது அது 12 மணி நேர வீடியோவாக மாறுகிறது. அந்த வீடியோவில் எதுவும் காட்டப்படவில்லை.
ஆனால் வீடியோவிற்கான விளக்கத்தில் நரகத்தில் என்னை வந்து சந்தி என அரபு சின்னத்தில் எழுதப்பட்டுள்ளது.
7 நாட்களுக்கு முன்னர் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ, 2 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
இவ்வளவு நீளமான வீடியோவை எப்படி யூடியூபில் பதிவேற்றம் செய்ய முடியும் எனவும், இது யூடியூப் நிறுவனம் சோதனைக்காக உருவாக்கப்பட்ட சேனலாக இருக்கலாம் என பலரும் விவாதித்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan