பறந்து வந்த பந்தை தரையில் படாமல்..கோலாக மாற்றிய வீரர்
9 மார்கழி 2025 செவ்வாய் 05:57 | பார்வைகள் : 720
பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வோல்வ்ஸ் அணியை வீழ்த்தியது.
Molineux மைதானத்தில் நடந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் வோல்வ்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் யுனைடெட் வீரர் புரூனோ பெர்னாண்டஸ் (Bruno Fernandes) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, முதல் பாதி முடியும் தருவாயில் (45+வது நிமிடம்) வோல்வ்ஸ் வீரர் ஜீன்-ரிக்னர் கோல் அடித்து சமன்படுத்தினார்.
51வது நிமிடத்தில் வோல்வ்ஸ் கோல் கீப்பர் முன்னே வந்துவிட, யுனைடெட் அணியின் பிரையன் பியூமோ (Bryan Mbeumo) சிரமமே இல்லாமல் எளிதாக பந்தை வலைக்குள் தள்ளினார்.
அடுத்த 9 நிமிடங்களில் (62வது நிமிடம்) வோல்வ்ஸ் வீரர்கள் புருனோவை பெர்னான்டோவை சுற்றி நெருக்கடி கொடுத்தனர்.
அதனால் புருனோ பந்தை உயர தூக்கி விட, காற்றில் பறந்து வந்த பந்தை மஸோன் மவுண்ட் அப்படியே கோலாக்கினார்.
இதன்மூலம் மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan