Paristamil Navigation Paristamil advert login

ILT20 போட்டியில் ருத்ர தாண்டவமாடிய பதும் நிசங்கா

ILT20 போட்டியில் ருத்ர தாண்டவமாடிய பதும் நிசங்கா

9 மார்கழி 2025 செவ்வாய் 05:57 | பார்வைகள் : 805


கல்ஃப் ஜெயெண்ட்ஸ் அணியில் விளையாடி வரும் பதும் நிஸங்கா அதிரடியாக அரைசதம் விளாசினார்.

 

துபாயில் நடந்து வரும் சர்வதேச லீக் டி20 போட்டியில் கல்ஃப் ஜெயெண்ட்ஸ் மற்றும் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

 

கல்ஃப் ஜெயெண்ட்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது. பதும் நிஸங்கா மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

 

இந்த கூட்டணி 42 பந்துகளில் 73 ஓட்டங்கள் குவித்தது. சிக்ஸர்களை பறக்கவிட்ட பதும் நிஸங்கா (Pathum Nissanka) 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசினார்.

 

குர்பாஸ் (Gurbaz) 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 40 ஓட்டங்கள் குவித்து தன்வீர் ஓவரில் ஆட்டமிழந்தார்.

 

அதன் பின்னர் வின்ஸ் 25 (22) ஓட்டங்களும், ஓமர்சாய் 20 (13) ஓட்டங்களும் விளாச கல்ஃப் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் குவித்தது.

 

குஸைமா தன்வீர் (Khuzaima Tanveer), நூர் அகமது (Noor Ahmad) தலா 2 விக்கெட்டுகளும், டேவிட் பெய்ன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்