Paristamil Navigation Paristamil advert login

மெஸ்ஸி தலைமையில் முதல் MLS கிண்ணத்தை வென்ற இன்டர் மியாமி

மெஸ்ஸி தலைமையில் முதல் MLS கிண்ணத்தை வென்ற இன்டர் மியாமி

8 மார்கழி 2025 திங்கள் 07:51 | பார்வைகள் : 540


இன்டர் மியாமி அணி 3-1 என்ற கணக்கில் வான்கூவரை வீழ்த்தி MLS கிண்ணத்தைக் கைப்பற்றியது.

 

MLS 2025 தொடரின் இறுதிப் போட்டி சேஸ் மைதானத்தில் நடந்தது. இன்டர் மியாமி, வான்கூவர் அணிகள் மோதின.

 

ஆட்டத்தின் 8வது நிமிடத்திலேயே வான்கூவர் (Vancouver) வீரர் எடியர் ஒகாம்போ சுயகோல் அடித்தார்.

 

இதன்மூலம் முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் இன்டர் மியாமி முன்னிலை வகித்தது. பின்னர் 60வது நிமிடத்தில் வான்கூவர் அணியின் அலி அகமது கோல் அடித்தார்.

 

அதற்கு பதிலடியாக ரோட்ரிகோ டி பால் 71வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆட்டத்தின் 90+6வது நிமிடத்தில் டாடியோ அல்லேண்டி கோல் அடிக்க, இன்டர் மியாமி அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக MLS கிண்ணத்தை வென்றது.

 

கால்பந்தில் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) தனது 48வது கிண்ணத்தை இன்டர் மியாமி அணிக்காக வென்று கொடுத்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்