16 பவுண்டரிகளுடன் 111 ஓட்டங்கள்! 1 ரன்னில் த்ரில் வெற்றி! அலறவிட்ட வீராங்கனை
7 மார்கழி 2025 ஞாயிறு 12:01 | பார்வைகள் : 1247
WBBL தொடரில் நேற்று நடந்த டி20 போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸை வீழ்த்தியது.
நார்த் சிட்னி ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் எல்லிஸ் பெர்ரி, சோபியா டங்கலே கூட்டணி வாணவேடிக்கை காட்டியது.
சோபியா டங்கலே (Sophia Dunkley) 40 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்க, எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry) சிக்ஸர், பவுண்டரிகள் என அடித்து நொறுக்கினார்.
இதன்மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் குவித்தது. சதம் விளாசிய பெர்ரி 71 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 111 ஓட்டங்கள் எடுத்தார். எலீனோர் லாரோசா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து ஆடிய அடிலெய்டு அணியில் பியூமன்ட் (23), பென்னா (31) நல்ல தொடக்கம் அமைத்தனர். அமண்டா ஜேட் 20 பந்துகளில் 31 ஓட்டங்கள் விளாசினார்.
மறுமுனையில் பிரிட்ஜெட் பேட்டர்சன் (Bridget Patterson) கடைசி ஓவரிலும் அதிரடியில் மிரட்டினார். அந்த ஓவரில் வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
முதல் 2 பந்துகளில் பவுண்டரிகள் அடித்த பிரிட்ஜெட், மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். ஆனால், 5வது பந்தில் கார்ட்னர் விக்கெட்டை வீழ்த்தி, எக்லெஸ்டோனை ரன் அவுட் செய்ய சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இறுதிவரை களத்தில் நின்ற பிரிட்ஜெட் பேட்டர்சன் 35 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இப்போட்டியில் சதம் விளாசி மிரட்டிய எல்லிஸ் பெர்ரி ஆட்டநாயகி விருது பெற்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan