ODI தொடரை கைப்பற்றிய இந்தியா - சச்சினின் பாரிய சாதனையை முறியடித்த கோலி
7 மார்கழி 2025 ஞாயிறு 10:01 | பார்வைகள் : 1085
சச்சினின் பாரிய சாதனை ஒன்றை விராட் கோலி முறியடித்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5T20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றிய நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும், 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், 3வது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில்,.தென் ஆப்பிரிக்கா முதலில் துடுப்பாட்டம் ஆடியது.
தென் ஆப்பிரிக்கா அணி 47.5 ஓவர்களில், 10 விக்கெட்களையும் இழந்து, 270 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 89 பந்துகளில் 106 ஓட்டங்கள் குவித்தார்.
271 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 39.5 ஓவர்களில் வெறும் 1 விக்கெட்டை மட்டும் இழந்து, 271 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 116 ஓட்டங்கள் குவித்தார். இதன் மூலம், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி, ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இந்த தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் விளாசிய விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதன் மூலம் 20 தொடர் நாயகன் விருது பெற்று, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருது பெற்ற வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
முன்னதாக, 19 தொடர் நாயகன் விருது பெற்று சச்சின் முதலிடத்தில் இருந்தார்.
ஷாகிப் அல் ஹசன் 17 முறையும், ஜாக் காலிஸ் 14 முறையும், சனத் ஜெயசூர்யா மற்றும் டேவிட் வார்னர்17 முறையும் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan