மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்கிறார்களா?
6 மார்கழி 2025 சனி 12:52 | பார்வைகள் : 648
இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக தொடங்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க பல நடிகர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், இறுதியாக விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், படத்தில் அவரது ஜோடியாக நடிப்பதற்காக நடிகை சாய் பல்லவியை படக்குழுவினர் அணுகி கதையை சொன்னதாக கூறப்படுகிறது.
அந்த கதையை கேட்ட பிறகு, படத்தில் நடிக்க சாய் பல்லவி சம்மதம் தெரிவித்துள்ளதாக தற்போது புது தகவல் வெளியாகியுள்ளது.தற்போது இந்த படத்திற்கான (போட்டோ ஷூட்) பணிகள் நடைபெற்று வருவதாகவும், 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்குப் பிறகு படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan