Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இரண்டு பேர் யார்... யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய  இரண்டு பேர் யார்... யார்?

6 மார்கழி 2025 சனி 11:52 | பார்வைகள் : 194


பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுவரை பிக் பாஸ் வரலாற்றில் இல்லாத வகையில் இந்த சீசனில் யார் டைட்டில் வெல்வார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஏனெனில் இந்த சீசனில் டைட்டில் வெல்லும் அளவுக்கு தகுதியுடன் இருக்கும் போட்டியாளர் ஒருவர் கூட இல்லை. அந்த அளவுக்கு படு சுமாரான சீசனாகவே இது அமைந்திருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த சீசன் நிறைவடைய உள்ளது.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடக்கும். அதில் அந்த வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தாங்கள் வெளியேற்ற விரும்பும் இரண்டு நபர்களை நாமினேட் செய்ய வேண்டும். அதன்படி இந்த வாரத்திற்கான நாமினேஷனில் வியானா, அரோரா, வீட்டு தலை ரம்யா, ஆதிரை ஆகியோர் தவிர்த்து எஞ்சியுள்ள 11 போட்டியாளர்கள் நாமினேட் ஆகி இருந்தனர். அவர்களில் இருந்து இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் ஆகி உள்ளனர்.

அந்த வகையில் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் எஃப்.ஜே, கனி திரு, திவ்யா, அமித் பார்கவ் மற்றும் சுபிக்‌ஷா ஆகியோர் இருந்தனர். அவர்களில் இருந்து இந்த வாரம் முதல் ஆளாக அமித் பார்கவ் எலிமினேட் ஆகி உள்ளார். இந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தார் அமித். அவர் வந்தபோது ஃபயராக இருந்தாலும் போகப் போக அவர் அப்படியே சைலண்டாகிவிட்டார். இதனால் அவரின் ஆட்டம் எடுபடாமல் போனது. இதன் காரணமாக கம்மியான வாக்குகளை பெற்று எலிமினேட் ஆகி உள்ளார்.

அதேபோல் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கும் மற்றொரு போட்டியாளர் சுபிக்‌ஷா. மீனவ பொண்ணு சிபி என்கிற யூடியூப் சேனல் நடத்தி பேமஸ் ஆனவர் சுபிக்‌ஷா. இவர் இந்த வீட்டுக்குள் வந்து நன்கு கேம் ஆடினாலும், இவரின் போகஸ் அவ்வப்போவது தடம்மாறி வந்தது. ஆரம்பத்தில் நடிப்பு, டான்ஸ் என இருந்த சுபிக்‌ஷா பின்னர் பீட் பாக்ஸ் பக்கம் சென்றார். இப்படி அங்கும் இங்குமாக சென்றதால் இவரின் கேமும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ளார் சுபிக்‌ஷா.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்