Paristamil Navigation Paristamil advert login

தலைவர் 173 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறாரா ?

தலைவர் 173 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறாரா ?

5 மார்கழி 2025 வெள்ளி 13:12 | பார்வைகள் : 608


கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த் அவரது 173வது படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே சுந்தர்.சி இந்த படத்தை விட்டு வெளியேறினார். சமீபத்தில் கிடைத்த தகவலின் படி ரஜினி 173வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக உறுதியாகியுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனவாம்.

இந்த படத்தின் அறிவிப்பை வருகின்ற டிசம்பர் 12ம் தேதியன்று ரஜினியின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஆக சாய் அபயன்கர் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ராம்குமார் பாலகிருஷ்ணன், சிம்பு கூட்டணியில் உருவாகவிருந்த படத்திற்கும் சாய் அபயன்கர் தான் இசையமைக்கிறார் என அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்