தீபிகா படுகோனுக்கு பதில் பிரியங்கா சோப்ரா?
3 மார்கழி 2025 புதன் 14:40 | பார்வைகள் : 125
சர்வதேச நட்சத்திரமான பிரியங்கா சோப்ராவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. ஒருபுறம், எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 1200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'வாரணாசி' என்ற தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மறுபுறம், பிரம்மாண்ட பட்ஜெட் படம் ஒன்றில் தீபிகா படுகோனுக்குப் பதிலாக அவர் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், இந்த செய்தி பிரியங்காவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
பிளாக்பஸ்டர் படமான 'கல்கி 2898 AD' படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றித்தான் பேசுகிறோம். இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, தீபிகா படுகோன் இனி தங்கள் படத்தின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தீபிகா 8 மணி நேர ஷிப்ட் கேட்டதால், அவரை படத்திலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது, அவருக்குப் பதிலாக பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, 'கல்கி 2898 AD 2' படத்தில் தீபிகாவுக்குப் பதிலாக ஆலியா பட் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், யார் நடிப்பது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ராஜமெளலி படத்தின் மூலம் பிரியங்கா சோப்ராவின் மார்க்கெட் பன்மடங்கு அதிகரிக்கும் என்பதால் அவரை கல்கி 2-வில் நடிக்க வைத்தால், அது தங்கள் படத்திற்கும் மிகப்பெரிய பூஸ்ட் ஆக அமையும் என படக்குழு திட்டமிட்டு பிரியங்காவை கமிட் செய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
'கல்கி 2898 AD' என்பது இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கிய அறிவியல் புனைகதை திரைப்படமாகும், இது 2024-ல் வெளியானது. இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, பிரம்மானந்தம், சாஸ்வதா சட்டர்ஜி மற்றும் ராஜேந்திர பிரசாத் போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 1042.25 கோடி ரூபாய் வசூலித்தது. படத்தின் இறுதிக் காட்சியில் இதன் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது. தகவல்களின்படி, 'கல்கி 2898 AD 2' சுமார் 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan